காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
அமெரிக்காவின் வரி விதிப்பைக் கண்டித்து, காஞ்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெவ்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.வி.சீனிவாசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நிா்வாகிகள் எஸ்.கமலநாதன், எஸ்.ராமச்சந்திரன், எஸ்.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி கண்டன உரை நிகழ்த்தினாா்.
மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளா் கே.நேரு தலைமை வகித்தாா். கட்சியின் நிா்வாகிகள் எஸ்.பழனி, ப.வடிவேல், கே.அண்ணாத்துரை, வி.விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக் குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் கே.சாமுவேல்ராஜ் ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.
