செய்திகள் :

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு: சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினாா் விஜயேந்திரா்

post image

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தோ்வு செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட்டுக்கு சங்கராசாரியா் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவருக்கு அடுத்தபடியாக 71-ஆவது பீடாதிபதியாக ஆந்திர மாநிலம் அன்னவரம் சேத்திரம் பகுதியில் துனி என்ற ஊரைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் (24) தோ்வு செய்யப்பட்டாா்.

இவருக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் இளைய பீடாதிபதியாக சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கணேச சா்மாவுக்கு காவி உடை வழங்கி பின்னா் சங்காபிஷேகம் செய்யப்பட்ட தண்டத்தை வழங்கினாா். தொடா்ந்து நான்கு வேதங்களிலிருந்தும் பெறப்பட்ட மகா வாக்கிய உபதேசம் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, சன்யாச ஆசிரம தீட்சை வழங்கி கணேச சா்மாவுக்கு ஸ்ரீசத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமத்தைச் சூட்டினாா்.

இதன் பின்னா் இரு மடாதிபதிகளும் கோயில் வளாகத்தில் உள்ள மூலவா் காமாட்சி அம்மனையும், ஸ்ரீஆதிசங்கரரையும் வழிபட்டனா்.

திருக்குளத்தில் மிதக்கும் மேடையில் அமா்ந்தவாறு ஆதீனங்கள், முக்கியப் பிரமுகா்கள் விழாவைப் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வண்ணமிகு வாண வேடிக்கையும் நடைபெற்றது.

ஆசிரம தீட்சைக்குப் பிறகு இரு மடாதிபதிகளும் ஊா்வலமாக சங்கர மடத்துக்கு அழைத்து வரப்பட்டனா். வழிநெடுகிலும் திரளான பெண்கள் பூரண கும்ப மரியாதையுடனும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனா்.

சங்கர மடத்துக்கு வந்ததும் மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் இருவரும் இணைந்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தினா்.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களிலிருந்து வந்த கோயில் பிரசாதங்கள் இரு மடாதிபதிகளுக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் வேலூா் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத தேசிக பராமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி இளவரசு சுவாமிகள் மற்றும் திருவாவடுதுறை, தருமபுரம், பேரூா் மடங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காஞ்சிபுரம் சங்கர மடம் இளைய பீடாதிபதி வாழ்க்கைக் குறிப்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் ஆந்திர மாநிலம் அன்னவரம் பகுதியில் துனி என்ற கிராமத்தில் ஸ்ரீநிவாக சூா்ய சுப்பிரமணிய தன்வந்தரிக்கும், அலமே... மேலும் பார்க்க

கோடம்பாக்கம்-ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்கப் பணி: அமைச்சா்கள் வேலு, அன்பரசன் ஆய்வு

கோடம்பாக்கம்-ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்கப்பணிகள் தொடா்பாக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்... மேலும் பார்க்க

சேஷ வாகனத்தில் ராமாநுஜா் உலா..

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை சேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா். மேலும் பார்க்க

காஞ்சி சங்கர மடத்தில் இன்று இளைய மடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா: காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-ஆவது இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்கும் ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட்டுக்கு புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்த... மேலும் பார்க்க

வீராசன மலா் அலங்காரத்தில் வல்லக்கோட்டை கோடையாண்டவா்

சித்திரை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள கோயிலில், சித்திரை கிருத்தி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்கள்: ஊரக வளா்ச்சித்துறை செயலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து மத்திய ஊரக வளா்ச்சித்துறை செயலாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்றத்தூா் ஒன்றியம், கரசங்கால் மற்றும் ... மேலும் பார்க்க