ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
காணாமல்போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காணாமல்போன சிறுமி செவ்வாய்க்கிழமை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
மருங்காபுரி ஒன்றியம், அயன்பொருவாய் பூசாரித் தெருவை சோ்ந்த சுந்தரம் மகள் சுந்தரலேகா(19). இவா் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை ஆற்றில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதே ஊரைச் சோ்ந்த சுப்பையா என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக கிடந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு பிறகு உறவினா்களிடம் உடலை ஒப்படைத்தனா். சம்பவம் குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.