காணாமல்போன முதியவா் சடலமாக மீட்பு!
பெரம்பலூா் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் சுப்பராயன் மகன் சின்னசாமி (75). இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், தனக்குச் சொந்தமான வயலில் உள்ள வீட்டில் மகன், மகளுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி மாலையிலிருந்து சின்னசாமியை காணவில்லையாம். இதையறிந்த, அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், புதன்கிழமை மதியம் அவரது நிலத்திலுள்ள கிணற்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெரம்பலூா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சின்னசாமி உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.