பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
`காதலிச்சுட்டு ஏமாத்த பாக்குறியா?' - சகோதரியை கைவிட்ட நபர்; பழிவாங்கிய பெண்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் அருகில் உள்ள மெளமா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவர் அங்குள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்கிறார். உமேஷ் சகோதரர் மனைவி மஞ்சு. மஞ்சுவின் இளைய சகோதரி அடிக்கடி உமேஷ் வீட்டிற்கு வந்து சென்றதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனால் மஞ்சுவின் சகோதரியை திருமணம் செய்து கொள்வதாக உமேஷ் உத்தரவாதமும் கொடுத்தார். ஆனால் அப்பெண்ணை திருமணம் செய்ய உமேஷ் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதோடு உமேஷிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். உமேஷும் மஞ்சுவின் சகோதரியிடமிருந்து விலக ஆரம்பித்தார். இதனால் மஞ்சுவின் சகோதரி மன அழுத்ததிற்குச் சென்றார். எப்போதும் தனிமையில் இருந்தார். இது மஞ்சுவிற்கு மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது. தனது சகோதரிக்கு திருமண ஆசையை காட்டிவிட்டு திருமணம் செய்ய மறுத்த உமேஷை பழிவாங்க முடிவு செய்தார்.
இதற்காக சம்பவத்தன்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு மஞ்சு உமேஷ் உறங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்றார். அங்கு உறக்கத்தில் இருந்த உமேஷின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டிவிட்டு மஞ்சு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த உமேஷை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். யார் இக்காரியத்தை செய்தது என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் மஞ்சுவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இறுதியில் தாக்கியதை மஞ்சு ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி விவேக்குமார் தெரிவித்துள்ளார்.
டாக்டர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி மர்ம உறுப்பை ஒன்று சேர்க்க ஆபரேஷன் செய்தனர். முழுமையாக குணமடைய 7 மாதங்கள் பிடிக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மஞ்சு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.