செய்திகள் :

'காதல்', 'கவிதை': சினேகன் குழந்தைகளுக்கு கமல் சூட்டிய பெயர்!

post image

பாடாலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதியினருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

இவர் எழுதிய பாடல்களான ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஞாபகம் வருதே மற்றும் ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ஆராரிராரோ பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களாகும்.

சினேகன் திருமணம் செய்துகொண்ட நடிகை கன்னிகா, சன் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண வீடு' தொடரில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் 'தேவராட்டம்', 'ராஜவம்சம்' படங்களிலும் பிரதான வேடங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிக்க: திருமண தேதியை அறிவித்த அமீர் - பாவ்னி ஜோடி!

இதனிடையே, சினேகன் மற்றும் கன்னிகா காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அண்மையில் சினேகன் - கன்னிகா தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

தங்க வளையல் அணிவிக்கும் கமல்ஹாசன்.

இந்த நிலையில், சினேகன் - கன்னிகாவின் குழுந்தைகளுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் 'காதல்', 'கவிதை' எனப் பெயர் சூட்டியுள்ளார். தங்க வளையல்களையும் அணிவித்துள்ளார்.

இது பற்றி கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காதலர் தினத்தில்... எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ... "காதல்" கன்னிகா சினேகன் என்ற பெயரையும் "கவிதை " கன்னிகா சினேகன் என்ற
பெயரையும்... அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசனுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் காதல் - கவிதை-யை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?

ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி வருவது இந்த நவீன காலத்தில் மிகப்பெரிய, அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம்..ஒரு காலத்தில் ஒரு ஊருக்கு ஒரு வீட்டில் தொலைபேசி இருக்கும். அ... மேலும் பார்க்க

20 கிலோ எடையைக் குறைத்த ஆண்டனி வர்கீஸ்!

நடிகர் ஆண்டனி வர்கீஸ் தன் உடல் எடையைக் குறைத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.பெபே (pepe) என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஆண்டனி வர்கீஸ். அங்கமாலி டயரிஸ், அஜகதந்திரம், ஆர்டிஎக்ஸ் படங்களில் நடித... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.19-02-2025புதன்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இருபால் இந்திய அணிகள் தோல்வி

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் போட்டியில், இந்திய மகளிா் அணி - ஸ்பெயினிடமும் (3-4), இந்திய ஆடவா் அணி - ஜொ்மனியிடமும் (1-4) செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டன.இதில் மகளிா் அணி ஆட்டத்தில், முதலில் இந... மேலும் பார்க்க

பாலினி, ரைபகினா, படோசா முன்னேற்றம்

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முன்னணி வீராங்கனைகளான, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, கஜகஸ்தானின் எலனா ரைபகினா, ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

சென்னையில் உலக ஸ்டாா் கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: மாா்ச் 25-இல் தொடக்கம்

வரும் மாா்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக ஸ்டாா் கன்டென்டா் டேபிள் டென்னிஸ் (டபிள்யுடிடி) போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் முதன்முறையாக நடைபெறுகிறது. ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் மற்றும் யுடிடி... மேலும் பார்க்க