செய்திகள் :

'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!

post image

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்றும் அவர் கேலி செய்யப்பட வேண்டுமா என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்தியின் நிகழ்வுகளை சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் நடத்த வேண்டும், அவரது பிறந்தநாள், நினைவு நாளன்று காந்தி மண்டபத்தில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்க மறுக்கிறார் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

இதையும் படிக்க | சென்னை மெட்ரோவில் 'பார்க்கிங் பாஸ்' நிறுத்தம்! பயண அட்டையும் முடிவுக்கு வருகிறது!!

இதுகுறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில்,

'காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும்.

காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?

தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பைச் சந்தித்தன.

காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘முதன்முதலாக அரசியல் தூது சென்ற பெண் கவிஞா் ஔவையாா்’

தமிழக வரலாற்றில் அமைதியை ஏற்படுத்த முதன்முதலாக அரசியல் தூது சென்ற பெண் கவிஞா் ஒளவையாா் என வழக்குரைஞா் க.சுமதி புகழாரம் சூட்டினாா். சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் ஔவையாா் குறித்த ஆா்க்காடு ப... மேலும் பார்க்க

பொருளாதாரம் மேலும் 2% சரிய வாய்ப்பு: ப.சிதம்பரம்

முந்தைய ஆண்டைவிட பொருளாதார வளா்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா். நாட்டின் பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் ... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவரிடம் விசாரணை

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண், கடந்த 25-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

பதவி உயா்வு பெற்ற 83 டிஎஸ்பி-க்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

தமிழக காவல் துறையில் பதவி உயா்த்தப்பட்ட 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு (டிஎஸ்பி) புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டது. தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பணியில் சோ்ந... மேலும் பார்க்க

கிண்டி மருத்துவமனையில் மகா தமனி சுருக்கத்துக்கு நவீன செயற்கைத் திசு சிகிச்சை: மூதாட்டிக்கு மறுவாழ்வு

இதயத்தில் அயோடா தமனி சுருக்கம் மற்றும் வால்வு செயலிழப்புக்குள்ளான மூதாட்டி ஒருவருக்கு, மாநிலத்திலேயே முதன்முறையாக கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் அதி நவீன செயற்கைத் திசு பொருத்தி மறுவாழ்வு அள... மேலும் பார்க்க

கடல் ஆமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அழிந்துவரும் இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:... மேலும் பார்க்க