செய்திகள் :

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: கைதான லூயிஜி மஞ்ஜானி யார்?

post image

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் லூயிஜி மஞ்ஜானி மீது கொலை, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகப்படும் நபராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை பென்சில்வேனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லூயிஜி மஞ்ஜானி, அரசு சார்பில் தொடரப்பட்டிருக்கும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வகையில் தான் நியூயார்க் திரும்ப ஒப்புக்கொண்டார். சுமார் ஐந்து நாள்களாக தேடப்பட்டு வந்த நிலையில், பென்சில்வேனியாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

லூயிஜி மஞ்ஜானி அங்கிருந்து நியூயார்க் அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பிறகு காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா என நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லூயிஜி மஞ்ஜானியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் ஆம் என்று அவர் பதிலளித்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கைவிலங்கு அவிழ்க்கப்பட்டு, காவலர்களுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர்களது கால்களில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளியின் புகைப்படத்தை தாக்கல் செய்த காவல்துறை

கைது செய்யப்பட்ட லூயிஜி மஞ்ஜானியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், காப்பீட்டு நிறுவன நிர்வாகியை சுட்டுக்கொல்வதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அவரது பின் பக்கம் துப்பாக்கியை ஏந்தியிருந்த புகைப்படங்களையும் நியூ கார்க் நகரில் கொலை செய்வதற்கு முன்பு அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் தாக்கல் செய்தனர்.

மேலும், கொலை நடந்த இடத்துக்கு கொலையாளி முதுகில் பை ஒன்றுடன் சைக்கிளில் வரும் புகைப்படங்களையும், கொலையை நிகழ்த்திவிட்டு பையை கழற்றிவிட்டு, டேக்ஸியில் ஏரியதும் முகமூடியை கழற்றும் புகைப்படங்களையும் அதனுடன் இணைத்திருந்தனர்.

அந்த புகைப்படங்களுடன், கைது செய்யப்பட்ட பிறகு, லூயிஜி மஞ்ஜானியின் முழு உடல் புகைப்படம், ஆயுதத்தால் சுட்டுக் கொலை செய்த கொலையாளியின் உருவத்துடன் ஒத்துப்போவதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது.

மன்ஹாட்டனுக்கு ஹெலிகாண்டரில் கொண்டுவரப்பட்ட லூயிஜி மஞ்ஜானி, பிறகு காவல்துறை வேன் மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அவரைச் சுற்றி ஏராளமான எஃப்பிஐ-என்ஒபிடி அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

என்ன தண்டனை கிடைக்கும்?

அரசு தரப்பு வழக்குரைஞர்கள் இது பற்றி கூறுகையில், மரண தண்டனை பெற்றுத்தர முடியுமா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், லூயிஜி மஞ்ஜானி மீது தொடரப்பட்ட வழக்கில், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நியூ யார்க் நகரில் அவர் தனது வழக்குரைஞர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார். பிறகு நீதிமன்றத்தின் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

குரோஷியா பள்ளியில் கத்திக்குத்து: சிறுமி உயிரிழப்பு

தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் ஸாக்ரெபில் உள்ள ஆரம்ப நில... மேலும் பார்க்க

அரியவகை நோய் பாதிக்கப்பட்ட 19 வயது டிக்-டாக் பிரபலம் மரணம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் அரியவகை நோய் தாக்கி மரணமடைந்தார்.19 வயதான டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் மிகவும் அரிதான ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் புரோஜீரியா என்ற ந... மேலும் பார்க்க

லூயிஜி மஞ்ஜானியை கொலையாளியாக்கிய ஸ்போண்டிலோசிஸ் என்ற கீல்வாதம்

ஒரு அங்குல இடைவெளி பெரிதாக என்ன செய்துவிடக்கூடும். ஆனால், லூயிஜி முதுகெலும்பில் இருக்கும் 33 எலும்புகளும் இருக்க வேண்டிய சரியான அளவில் இல்லாமல் அரை அங்குலத்துக்கும் குறைவான இடைவெளிக்குள் வந்ததால், அவர... மேலும் பார்க்க

குரோஷியா: பள்ளிக்குள் கண்ணில் பட்ட அனைவருக்கும் கத்திக்குத்து! இளைஞர் கைது!

குரோஷியா நாட்டில் ஒரு பள்ளிக்குள் நுழைந்து, கண்ணில் பட்ட அனைவரையும் கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.குரோஷியா நாட்டின் தலைநகரான ஸாக்ரெப்பில் இயங்கி வரும் பள்ளிக்குள், வெள்ளிக்கிழமை (டிச. 2... மேலும் பார்க்க

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: தலைதூக்கும் 3டி-பிரிண்டட் துப்பாக்கி! அப்படி என்றால்?

அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை செயல் நிர்வாகி பிரையன் தாம்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 3டி-பிரிண்டட் துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டி... மேலும் பார்க்க

யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒன்பது போ் உயிரிழந்தனா். இது குறித்து இஸ்ரே... மேலும் பார்க்க