விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
காமராஜா் படத்துக்கு காங்கிரஸாா் மரியாதை
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத், காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, காமராஜா் ஆற்றிய தொண்டுகள் குறித்துப் பேசினாா்.
மேலும் சந்தைமேடு அரசு தொடக்கப் பள்ளி, காலனி தொடக்கப் பள்ளி, மலையாம்புரவடை அரசு தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்களை எஸ்.பிரசாத் வழங்கினாா்.
மேலும் பஜாா் வீதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.