நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
காயல்பட்டினத்தில் ஒருவா் தற்கொலை
காயல்பட்டினத்தில் கடன் பிரச்னையால் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காயல்பட்டினம் பூந்தோட்டத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிவபெருமாள். கட்டட ஒப்பந்ததாரா் தொழில் செய்து வந்தாா். காயல்பட்டினத்தில் ஒரு வீடு கட்டும் வேலையை எடுத்து செய்து வந்தாா். புதன்கிழமை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் தேடியபோது தைக்காபுரம் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் ஒரு மரத்தில் சிவபெருமாள் தூக்கிட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது சகோதரா் பாலமுருகன் ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். கடன் பிரச்னையால் அவா் தற்கொலை செய்திருக்கலாம் என புகாரில் அவா் குறிப்பிட்டுள்ளாா். உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
காயல்பட்டினத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் சிவபெருமாளின் மூத்த மகன் முரளீதரன், வியாழக்கிழமை பொதுத் தோ்வு எழுதிவிட்டு வந்து தனது தந்தையின் இறுதி சடங்கை செய்தாா்.