செய்திகள் :

காய்கறிகள் விலை நிர்ணயம்: திமுகவின் வாக்குறுதி என்னவானது? - அன்புமணி கேள்வி

post image

அனைத்துக் காய்கறிகளுக்கும் விலை நிர்ணயிக்கும் திமுகவின் வாக்குறுதி என்னவானது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாட்டில் தக்காளி  விளைச்சல் அதிகரித்திருப்பதால் சந்தைகளில் அதன்  கொள்முதல் விலை  கிலோ ரூ.3- க்கும் குறைவாக சரிந்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததாலும், அதை சந்தைக்கு கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்குக்கூட தக்காளி விலை கட்டுபடியாகாது என்பதாலும்  உழவர்கள் தக்காளியை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டி வருவது வேதனையளிக்கிறது. தக்காளி விலையை நிலைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இதையும் படிக்க| கண்கண்ட தெய்வமா, கணவன்?ஜென்டில்வுமன் - திரை விமர்சனம்!

ஒரு கிலோ தக்காளி உற்பத்தி செய்ய குறைந்தது ரூ.10 செலவாகிறது. தக்காளி அறுவடை, போக்குவரத்து செலவு ஆகியவற்றுடன் லாபமும் சேர்த்து குறைந்தது ஒரு கிலோ தக்காளி  ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டால்தான் உழவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால்,  தக்காளி நல்ல விளைச்சல் ஈட்டும்போது கிலோ ரூ.3-க்குகூட வாங்கப்படுவதில்லை. அதேநேரத்தில், விளைச்சல் இல்லாத போது, வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ. 200 வரை விற்கப்படும்போது, அதில் பெருந்தொகையை வணிகர்களும், இடைத்தரகர்களும்தான் எடுத்துக்கொள்கிறார்களே தவிர உழவர்களுக்கு பெரிய தொகை கிடைப்பதில்லை. அந்த நேரத்தில் உழவர்களுக்கு சற்று அதிக விலை கிடைத்தாலும்கூட அவர்கள் செய்த செலவையும், விளைச்சலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்காது.

ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை படுமோசமான வீழ்ச்சியையும்,  எட்ட முடியாத உச்சத்தையும் தொடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு காய்கறிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்குவதுதான். கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20 சதவீதம் லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. கேரளம் செய்ததை தமிழகமும் செய்திருந்தால் விவசாயிகளுக்கு விளைபொருட்களை குப்பையில் கொட்டவேண்டியிருந்திருக்காது. அத்துடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும்.

கேரளத்தில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டபோது, அதே முறையை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிப்போம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதி என்னவானது? இதன் மூலம் உழவர்களுக்கு திமுக அரசு பெருந்துரோகம் செய்து வருகிறது.

உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும். அத்துடன் வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும், தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளையும் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை காக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலா... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மார்ச் 11 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.வரும் மார்ச் 11 ஆம் தேதி... மேலும் பார்க்க