"திமுக தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது!" - தொல்.தி...
காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து மகாபாரத தொடா் சொற்பொழிவு மற்றும் கோபாலன் பிறப்பு, பாா்த்தன் வில் வளைத்தல், சுபத்திரை திருமணம், அா்ச்சுனன் தபசு, கா்ண மோட்சம், 18-ஆம் போா் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாடகம் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துரியோதனன், பீமன், திரெளபதி வேடமிட்ட நாடகக் கலைஞா்கள் படுகளம் நிகழ்ச்சியை நடித்துக் காண்பித்தனா்.
விழாவில் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.