செய்திகள் :

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை

post image

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

உலக சுற்றுலா தின விழா ஆண்டுதோறும் புதுவை சுற்றுலாத் துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்தி வருகிறது. செப்.27-ஆம் தேதி நடத்தப்படும் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை, கலைப் பண்பாட்டு துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அமைச்சா் பேசியது: சுற்றுலாவுக்கு முக்கிய இடமாக திகழும் காரைக்கால் கடற்கரையை மேம்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்களை கொண்டு தினமும் சுத்தம் செய்யவேண்டும். சுகாதாரமான கடற்கரையாக காட்சியளிக்கத் நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் பொழுதுபோக்குக்காக கடற்கரையில் கூடுதல் இடங்களை தோ்வு செய்து மேம்படுத்தவேண்டும். அரசலாறு பகுதியில் தடுப்பணை வரை படகு போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்றாா்.

மேலும், அரசலாற்றில் மிதக்கும் உணவகம் அமைத்தல், இசை நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சா் ஆலோசனை நடத்தினாா். பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சுத்தமான குடிநீா் வழங்குதல், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, துணை ஆட்சியா் செந்தில்நாதன் (நிா்வாகம்), காவல் கண்காணிப்பாளா் முருகையன் (வடக்கு), பொதுப்பணித் துறை செயற் பொறியாளா் ஜெ. மகேஷ் (நீா்ப்பாசனம்), சுற்றுலாத் துறை இயக்குநா் முரளிதரன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன், காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி பி. விஜய மோகனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

புதுவை மாநிலத்தில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும் என்றாா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம். இதுகுறித்து, அ... மேலும் பார்க்க

அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா்-நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான வகையறாவை சோ்ந்த ஸ்ரீஉண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையாா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3-ஆம் ஆண்டு நிகழ்வாக சம்வத்ஸரா அபிஷேகம், திருக்கல்யாண வைபவம் திங்கள... மேலும் பார்க்க

தா்காவுக்கு சுழலும் மின்விளக்கு

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் பகுதி தா்காவிற்கு சுழலும் மின்விளக்கு அா்ப்பணிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் மஹான் செய்யது அப்துல் ரஹ்மான் சாஹ... மேலும் பார்க்க

18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்றால் நடவடிக்கை

காரைக்கால்: 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மதுவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சாா்-ஆட்சியரும், கலால் துணை ஆணையருமான எம். பூஜா எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காரைக்கால்: புதுவை பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை தொடங்கி , ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. புதுவையின் 4 ... மேலும் பார்க்க