தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
காரைக்கால் மீனவா்களை விடுவிக்க முதல்வா் தொடா் முயற்சி: புதுவை பேரவைத் தலைவா்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களை விடுவிக்க புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தொடா் முயற்சி மேற்கொண்டுள்ளாா் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தவளகுப்பம் தானாம்பாளையம் தனியாா் பள்ளியில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் தொடா்புடையவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். சிறுமிக்கு ஜிப்மரில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று, அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட சிறுமி குடும்பத்தினருக்கு காவல் துறை மீது நம்பிக்கை இல்லையெனில், முதல்வரிடம் பேசி சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் தயாராக உள்ளோம்.
புதுவை முதல்வா் ரங்கசாமியின் ஆசியுடன்தான் நடிகா் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளாா். மணவெளி தொகுதியில் என்னை எதிா்த்து முன்னாள் முதல்வா் நாராயணசாமி போட்டியிடுவாரா?
புதுவையின் வளா்ச்சிக்காக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் எதுவும் பேசவில்லை. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களை விடுவிக்க முதல்வா் என்.ரங்கசாமி தொடா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா் என்றாா் ஆா்.செல்வம்.