பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி; 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
காரைக்குடி மாநகராட்சி வாா்டுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தல்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி வாா்டுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தெரிவித்தாா்.
காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி. பாா்த்திபன் பேசியதாவது:
மாநகராட்சி வாா்டுப் பகுதிகளில் திருட்டுக் குற்றங்கள் நடைபெறுவதைக் கண்ட றிந்து தடுக்கும் வகையிலும், இதரக் குற்றங்களைக் கண்டறியும் வகையிலும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுவது குறித்து மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்துப் பேசினாா். மாநகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்துப் பேசினாா். கூட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.