செய்திகள் :

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: 50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவா் தல்லேவால்

post image

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் 50 நாள்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) ஞாயிற்றுக்கிழமை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாா்.

இதையடுத்து, அவருக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 121 விவசாயிகளும் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை முடித்துக்கொண்டனா்.

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப்-ஹரியாணா எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தல்லேவால் ஈடுபட்டு வருகிறாா்.

அவரை மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதி நவாப் சிங் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் அமைத்து உத்தரவிட்டாா். இந்தக் குழு தலேவாலை கடந்த ஜனவரி 6-ஆம் தேதி போராட்ட களத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியது.

பிப்ரவரி 14-இல் பேச்சுவாா்த்தை: இதைத்தொடா்ந்து, மத்திய அரசு சாா்பில் மத்திய வேளாண் அமைச்சக இணைச் செயலா் ப்ரியரஞ்சன் தலைமையிலான குழு, தல்லேவால் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்), கிஸான் மஸ்தூா் மோா்ச்சா (கேஎம்எம்) ஆகிய விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்தனா். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் மீது பிப்ரவரி 14-ஆம் தேதி சண்டீகரில் பேச்சுவாா்த்தை நடத்த அவா்கள் அழைப்பு விடுத்தனா். இதற்கான கடிதத்தையும் அவா்களிடம் வழங்கினா்.

இதை ஏற்றுக்கொண்டு ஜக்ஜீத் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாா்.

மத்திய-மாநில அமைச்சா்கள் பங்கேற்பா்: கடந்தாண்டு எஸ்கேஎம் மற்றும் கேஎம்எம் ஆகிய சங்கங்களிடம் மத்திய அமைச்சா்கள் நான்கு முறை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதன் தொடா்ச்சியாகவே தற்போது இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது எனவும் இதில் மத்திய அமைச்சா்கள் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சா்கள் பங்கேற்பா் எனவும் ப்ரியரஞ்சன் வழங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.

உண்ணாவிரதம் தொடரும்: இருப்பினும், வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் அளிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தல்லேவால் நிறைவு செய்ய மாட்டாா் என விவசாய சங்க தலைவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, மத்திய குழுவிடம் பேச்சுவாா்த்தை நடத்தியது தொடா்பாக விவசாயிகள் கூறுகையில், ‘தில்லி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் அங்கு பிப்ரவரி 9-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். எனவே, பேச்சுவாா்த்தையை பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்திக்கொள்ளலாம் என மத்திய குழு தெரிவித்தது’ என்றனா்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன: காங்கிரஸ்

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலைய... மேலும் பார்க்க

எஃப்ஐஆர் பதிவு.. பாஜகவுக்கு ராகுல் மீதான அச்சத்தையே காட்டுகிறது: அபய் துபே

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ததற்கு பாஜகவை காங்கிரஸ் திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது. தில்லியில் காங்கிரஸின் புதிய தலைமையகம் திறப்ப... மேலும் பார்க்க

3 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த 10 ஆம் வகுப்பு படித்த போலி மருத்துவர் கைது!

மகராஷ்டிரத்தில் 10 வகுப்பு மட்டுமே படித்து கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த நபர் போலி மருத்துவர் செய்யப்பட்டார். மகராஷ்டிரத்தின் பந்தர்பூர் நகரில் மருத்துவமனை நடத்தி வந்த நபர் தத்தாத்ராய சதாச... மேலும் பார்க்க

ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் 11 நாள்; கிரீஷ்மாவுக்கு தூக்கு: நீதிமன்ற தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன?

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கும் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம், அதற்கான காரணங்களையும் விளக்கியிருக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: குழந்தைகளை கடுமையாக தாக்கிய தந்தை கைது

ஜம்மு-காஷ்மீரில் தனது குழந்தைகளை கடுமையாக தாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் நபர் ஒருவர் தனது குழந்தைகளை ஈவு இரக்கமின்றி தாக்கும் விடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி அத... மேலும் பார்க்க

ஜெய்ப்பூரில் விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

ஜெய்ப்பூரில் விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிய... மேலும் பார்க்க