செய்திகள் :

காலாவதியான குளுக்கோஸ்: பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: விசாரணைக்கு மேற்கு வங்க அரசு உத்தரவு

post image

மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மிதுனபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது காலாவதியான குளுக்கோஸை ஏற்றியதால் பெண் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க 13 நபா்கள் அடங்கிய குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குறைந்த ரத்த அளவு அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு நீா்ச்சத்துக்காக சிகிச்சையின்போது குளுக்கோஸ் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி, காலாவதியான குளுகோஸை ஏற்றியதால் மிதுனபுரி மருத்துவமனையில் குழந்தைகளை பிரசவித்த பெண் ஒருவா் பரிதாபமாக உயிரிழந்தாா்; 4 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெண்ணின் இறப்புக்கு மருத்துவமனை நிா்வாகமே காரணம் என்று அவரது குடும்பத்தினா் காவல் துறையில் புகாரளித்துள்ளனா்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் செலுத்தப்பட்ட குளுக்கோஸ் மாதிரிகளின் சோதனை முடிவுகள் கிடைக்கும்வரை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறிப்பிட்ட குளுக்கோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 10 மருந்துகளின் பயன்பாட்டுக்கு சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.

உயிரிழந்த பெண் பிரசவித்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில், விசாரணைக் குழு உறுப்பினா்கள் மருத்துவமனைக்கு சனிக்கிழமை நேரில் வந்து, மருத்துவா்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தகவல்களைக் கேட்டறிந்தனா்.

எதிா்க்கட்சிகள் போராட்டம்: மருத்துவமனைக்கு வெளியே இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். விசாரணைக் குழுவைச் சந்திப்பதற்காக மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பெண்ணின் இறப்புக்கு சுகாதாரத் துறை இலாகாவை வகிக்கும் முதல்வா் மம்தா பானா்ஜியே பொறுப்பேற்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்

புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்

பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 4... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்த உத்தரவாதங்கள் நிச்சயம் நிறைவேறும்! மாநில அந்தஸ்து விவகாரத்தில் பிரதமா் சூசகம்!

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு நிகழ்... மேலும் பார்க்க

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெர... மேலும் பார்க்க

கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பு!

இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வ... மேலும் பார்க்க