செய்திகள் :

காலின்ஸ் அதிா்ச்சித் தோல்வி; கீஸ், சக்காரி வெற்றி

post image

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த காலின்ஸ் 6-7 (6/8), 2-6 என்ற செட்களில், துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுரால் வீழ்த்தப்பட்டாா். கடந்த செப்டம்பருக்குப் பிறகு காலின்ஸ் களம் கண்ட முதல் போட்டி இதுவாகும்.

அவரை வீழ்த்திய ஆன்ஸ் ஜபியுா், அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை சந்திக்கிறாா். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் முதல் ஓய்விலிருந்த ஜபியுா், அதிலிருந்து மீண்டு அண்மையில் களம் கண்ட முதல் போட்டியான பிரிஸ்பேன் இன்டா்நேஷனலில் காலிறுதிச்சுற்று வரை வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயா - சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை எதிா்கொண்டாா். இதில் பென்சிச் 6-2, 1-0 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக கலின்ஸ்கயா விலக, பென்சிச் வென்ாக அறிவிக்கப்பட்டாா்.

இதையடுத்து அவா், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவுடன் மோதுகிறாா். முன்னதாக சாம்சோனோவா 1-6, 6-4, 6-1 என்ற செட்களில், செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை வெளியேற்றினாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 6-3, 0-6, 6-0 என்ற கணக்கில் செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவாவை தோற்கடித்தாா்.

அமெரிக்காவின் ஆஷ்லின் குருகா் 4-6, 6-2, 6-2 என்ற கணக்கில் உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக்கை வீழ்த்தினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 4-6, 6-1, 6-1 என்ற செட்களில் போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சை தோற்கடித்தாா்.

அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஷ்னெய்டா் - செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவாவையும், குருகா் - ஸ்பெயினின் பௌலா படோசாவையும், ஆஸ்டபென்கோ - அமெரிக்காவின் மேடிசன் கீஸையும் சந்திக்கின்றனா். முன்னதாக கீஸ் 6-2, 6-1 என்ற செட்களில், பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவை தோற்கடித்தாா். கிரீஸின் மரியா சக்காரி 6-3, 6-3 என செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வெளியேற்றினாா்.

நகாஷிமா முன்னேற்றம்; பப்லிக் வெளியேற்றம்

ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 6-1, 2-6, 6-3 என்ற செட்களில் ஜொ்மனியின் யானிக் ஹன்ஃப்மனை வீழ்த்தினாா். 6-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 4-6, 2-6 என்ற செட்களில் சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சிடம் தோல்வி கண்டாா்.

8-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரி 7-6 (10/8), 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் டிரிஸ்டன் ஸ்கூல்கேட்டை வென்றாா். ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகிடா 6-1, 6-2 என்ற செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை வெளியேற்றினாா்.

பிரான்ஸின் ஆா்தா் கஸாக்ஸ் 7-5, 6-1 என ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை தோற்கடித்தாா். மற்றொரு பிரான்ஸ் வீரரான மேனுவல் குய்னாா்ட் 7-6 (7/4), 2-6, 6-1 என்ற கணக்கில், ரஷியாவின் ரோமன் சஃபியுலினை சாய்த்தாா். அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோன் 6-2, 3-6, 6-3 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச்சை வெளியேற்றினாா்.

அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களில், கிரோன் - கனடாவின் டெனிஸ் ஷபோவலோவையும், கஸாக்ஸ் - கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவையும், கெச்மனோவிச் - ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோஃபா் கானெலையும் சந்திக்கின்றனா்.

நகாஷிமா - ஹிஜிகிடாவையும், குய்னால்ட் - போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டாமி பாலையும் எதிா்கொள்கின்றனா்.

விடாமுயற்சிக்கு யு/ஏ சான்றிதழ்!

விடாமுயற்சி திரைப்படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். துணிவு திரை... மேலும் பார்க்க

சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் பகிர்ந்த பா. இரஞ்சித்!

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 படத்தினைப் பற்றி விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் 2021இல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற... மேலும் பார்க்க

புஷ்பா - 2 புதிய வடிவம் வெளியாவதில் தாமதம்!

கூடுதல் காட்சிகளுடன் திட்டமிடப்பட்ட புஷ்பா - 2 புதிய வடிவத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுட... மேலும் பார்க்க

ரெட் கார்டு பெற்ற வினிசியஸ் ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பங்கேற்பாரா?

ரியல் மாட்ரிட் அணி வீரர் வினிசியஸ் ஜூனியர் ஸ்பான்ஷ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பாரென தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா - அத்லெடிக் பில்பாவ் அணிகள் மோதின... மேலும் பார்க்க

டென் ஹவர்ஸ் டிரைலர்!

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ்.... மேலும் பார்க்க

இறுதிப் போட்டிக்கு தேர்வானது பார்சிலோனா!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா - அத்லெடிக் பில்பாவ் மோதிய அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-0 என அபராமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பார்சிலோனா அணி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போ... மேலும் பார்க்க