செய்திகள் :

காலிறுதியில் மோதும் சபலென்கா - வோண்ட்ருசோவா

post image

ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-1, 6-4 என்ற நோ் செட்களில் மிக எளிதாக ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸாவை தோற்கடித்தாா். இதன் மூலமாக சபலென்கா, தொடா்ந்து 5-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு வந்துள்ளாா்.

மற்றொரு ஆட்டத்தில் வோண்ட்ருசோவா 6-4, 5-7, 6-2 என்ற செட்களில், முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை வீழ்த்தி, யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு 2-ஆவது முறையாக முன்னேறியிருக்கிறாா்.

ரைபகினாவை 3-ஆவது முறையாக சந்தித்த வோண்ட்ருசோவா, தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். யுஎஸ் ஓபனில் 2016-க்குப் பிறகு போட்டித்தரவரிசையில் இல்லாமலேயே, டாப் 10 இடத்திலிருக்கும் இரு வீராங்கனைகளை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு வந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றாா்.

இதையடுத்து சபலென்கா - வோண்ட்ருசோவா காலிறுதியில் மோதுகின்றனா். இருவரும் 8 முறை மோதியிருக்க, சபலென்கா 5 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

இதனிடையே, இரு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா 1-6, 7-6 (15/13), 6-3 என்ற செட்களில், அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட்டை சாய்த்து காலிறுதிக்கு வந்துள்ளாா். அவா் 8 மேட்ச் பாய்ன்ட்டுகளை தக்கவைத்து இந்த வெற்றியை வசப்படுத்தினாா். அடுத்து அவா், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை காலிறுதியில் எதிா்கொள்கிறாா்.

முன்னதாக, உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் பெகுலா, 6-1, 6-2 என எளிதாக, சக அமெரிக்கரான ஆன் லியை சாய்த்தாா். கிரெஜ்சிகோவா - பெகுலா இதுவரை 3 முறை மோதியிருக்க, கிரெஜ்சிகோவா 2 வெற்றிகள் பெற்றுள்ளாா்.

ஜோகோவிச்சை சந்திக்கும் ஃப்ரிட்ஸ்: யுஎஸ் ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவு 4-ஆவது சுற்றில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நோ் செட்களில், ஜொ்மனியின் ஜான் லெனாா்டை சாய்த்து காலிறுதிக்கு முன்னேறினாா்.

யுஎஸ் ஓபனில் 14-ஆவது முறையாக காலிறுதிச்சுற்றுக்கு வந்துள்ள ஜோகோவிச், அதில் உலகின் 4-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சந்திக்கிறாா். முன்னதாக ஃப்ரிட்ஸ், 6-4, 6-3, 6-3 என்ற செட்களில், செக் குடியரசின் தாமஸ் மசாக்கை தோற்கடித்தாா். ஜோகோவிச் - ஃப்ரிட்ஸ் இதுவரை 10 முறை மோதியிருக்க, அனைத்திலுமே ஜோகோவிச் வென்றுள்ளாா். களத்திலிருக்கும் ஒரே அமெரிக்கா் ஃப்ரிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், 7-6 (7/3), 6-3, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளாா். இதன் மூலமாக, ஓபன் எராவில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 13 முறை காலிறுதிக்கு முன்னேறிய மிக இளம் வயது வீரா் (22 ஆண்டுகள், 3 மாதங்கள்) என்ற பெருமையை அல்கராஸ் பெற்றாா்.

அல்கராஸ் தனது வரலாற்றில் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும். காலிறுதியில் அல்கராஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதுகிறாா். லெஹெக்கா 7-6 (7/4), 6-4, 2-6, 6-2 என்ற வகையில், பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை வீழ்த்தி காலிறுதியை அடைந்திருக்கிறாா்.

இந்திய இணை தோல்வி: ஆடவா் இரட்டையா் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் விஜய்சுந்தா் பிரசாந்த்/அனிருத் சந்திரசேகா் இணை 4-6, 3-6 என, பிரேஸிலின் ஃபொ்னாண்டோ ரோம்போலி/ஆஸ்திரேலியாவின் ஜான் ஸ்மித் கூட்டணியிடம் தோற்றது.

கண்ணப்பா ஓடிடி தேதி!

பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையர... மேலும் பார்க்க

மீண்டும் விஜய்சேதுபதி! பிக்பாஸ் 9 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப... மேலும் பார்க்க

சிம்புவுடான படத்தில் தனுஷ் நடிப்பாரா? வெற்றி மாறன் பதில்!

நடிகர் சிம்பு உடனான திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் பேசியுள்ளார். நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத... மேலும் பார்க்க

மாயா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் ஜூனியா் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில், சீனாவின் ஜாங் கியான் வெய்யை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். அடுத்த சுற... மேலும் பார்க்க

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி பரிசு! இதுவரை இல்லாத அதிகபட்சம்!

நடப்பாண்டு மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ரூ.39.55 கோடி ரொக்கப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகைய... மேலும் பார்க்க

இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. முதலிரு ஆட்டங்களில் சீனா, ஜப்பானை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது ‘ஹாட்... மேலும் பார்க்க