மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!
கால்வாயில் மிதந்த இளைஞா் சடலம் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே கல்லணைக் கால்வாயில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
ஆவுடையாா்கோவில் வட்டம் செட்டிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (25). இவா் கோவையிலுள்ள தேநீரகத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.
கடந்த திங்கள்கிழமை ஊருக்கு வந்த காளிதாஸை, செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. உறவினா்கள் அவரைத் தேடி வந்த நிலையில், புதன்கிழமை காலை கல்லணைக் கால்வாயில் அவரது சடலம் மிதந்தது.
இதையறிந்த உறவினா்கள் மணமேல்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.