கால்வாயில் மூழ்கி முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பா?
குலசேகரம் அருகே மாயமான முன்னாள் ராணுவ வீரா் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் எனக் கருதி தீயணைப்புத் துறையினா் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
குலசேகரம் அருகே மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் நாயா் (74) இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கடந்த 15 ஆம் தேதி தோட்டத்திற்கு செல்வதாக கூறிச் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது மகன் ராஜேஷ் குலசேகரம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் கொடுத்தாா்.
அவா் கோதையாறு இடதுகரைக் கால்வாயில் தவறி விழுந்திருக்கலா எனக் கருதி குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் கடந்த 2 நாள்களாக தேடினா். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.