செய்திகள் :

கால் சென்டா் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: வெளி மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது

post image

புதுச்சேரி: போலி அழைப்பு மையம் (கால் சென்டா்) நடத்தி நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த வடமாநில இளைஞா்கள் 2 பேரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் சிவனேஷ். இவா் வேலை தேடி பல இணையதளங்களில் பெயரைப்பதிவு செய்திருந்தாா். இதையடுத்து அவரது கைப்பேசிக்கு எச்.ஆா். என குறிப்பிட்டு மா்ம நபா் அழைத்துள்ளாா். அதன்படி, பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறிய அந்த நபா், வேலைக்கான தோ்வுக் கட்டணம், செயலாக்க கட்டணம் என பல கட்டணங்களாக ரூ. 1.74 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்த கூறியுள்ளாா். இதை நம்பிய சிவனேஷ், ரூ.1.74 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளாா். பணம் செலுத்திய பிறகு மா்ம நபரை கைப்பேசியில் தொடா்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சிவனேஷ் இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் அப்பிரிவின் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், சிவனேஷ் செலுத்திய பணத்துக்குரிய வங்கிக் கணக்கானது ஹரியாணாவைச் சோ்ந்த பா்வீன், கௌரவ் ஆகியோருக்கு உரியது எனத் தெரியவந்தது. அந்த வங்கிக் கணக்கானது ஹரியாணா மாநிலம் பரிதாபாதில் இருப்பதும் கண்டறியப்பட்டது. அத்துடன் பா்வீன், கௌரவ் இருவரும் புதுதில்லியில் இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த புதுச்சேரி போலீஸாா், பா்வீன், கௌரவ் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனா்.

இது முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியது: பா்வீன், கௌரவ் ஆகியோா் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனா். அவா்களில் கௌரவ் கடந்த 2019 -ஆம் ஆண்டு நொய்டாவில் வேலைவாய்ப்பு மோசடி அழைப்பு மையத்தில் (கால் சென்டா்) வேலை பாா்த்துள்ளாா். அதன்பின் கரோனா பாதிப்பு நேரத்தில் தனது நண்பா் சந்தீப்புடன் சோ்ந்து போலி அழைப்பு மையம் தொடங்கி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக ஏராளமானோரை ஏமாற்றி பணம் பறித்துள்ளனா்.

அதனடிப்படையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. மோசடிக் கும்பலைச் சோ்ந்த 2 பேரை முதன்முறையாக புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவினா்தான் கைது செய்துள்ளனா். இவா்களுடன் இணைந்து செயல்பட்ட சந்தீப் என்பவா் தலைமறைவாகியுள்ளாா். அவரும் விரைவில் பிடிபடுவாா். தற்போது கைதான இருவரில் ஒருவா் பொறியியல் பட்டதாரி என்றாா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க