பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
காவலர் மீது துப்பாக்கிச் சூடு : சிறுவன் கைது
வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களைக் கண்டறியும் விதமாக டிஎல்எம் மருத்துவமனை அருகே போலீஸôர் புதன்கிழமை காலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பதிவெண் பொருத்தப்படாத மோட்டார்சைக்கிளில் இருவர் வருவதைப் பார்த்த போலீஸôர், வாகனத்தை நிறுத்தும்படி அவர்களுக்கு சைகை காண்பித்தனர்.
இதைப் பார்த்த, அந்த நபர்கள் நிறுத்தாமல் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
இதையடுத்து, போலீஸôர் அந்த மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர்.
அப்போது, வாகனத்தின் பின்னிருக்கையில் இருந்த சிறுவன் போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தலைமைக் காவலர் ரோஹித் அதிருஷ்டவசமாக காயமின்றி உயர்தப்பினர்.
சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, மோட்டார் சைக்கிள் சமநிலையை இழந்தது.
அப்போது, சாலையில் விழுந்த அவர்களில் ஒரு நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீஸôர் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, இரு தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் அது நரேலா பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் எனத் தெரியவந்தது. பிற வழக்குகளில் அந்தச் சிறுவனுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.