காவல்துறை அனுமதி மறுத்தும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: தெலங்கானா முதல்வர்
காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி எழுப்பிய கேள்விக்கு சனிக்கிழமை பதிலளித்து பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, தியேட்டருக்கு செல்ல வேண்டாம் என்று நடிகரை காவல்துறையினர் கூறியதாகவும், ஆனால் அவர் அங்கு சென்றார். அல்லு அர்ஜுன் மட்டும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு சென்றிருந்தால் எந்த பிரச்னையும் இருந்திருக்காது.
ஆனால் அவர் ரோட் ஷோ நடத்தினார். இதனால், அருகிலுள்ள அனைத்து தியேட்டர்களில் இருந்தும் மக்கள் சந்தியா தியேட்டர் நோக்கி வந்தனர். அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார். பலியானபோதும் அந்தப் பெண் தன் மகனின் கையைப் பிடித்தபடியே இருந்தார் என்றார்.
நடிகா் அல்லு அா்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவே ஹைதராபாதில் உள்ள திரையரங்கில் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியானது. இதனால், திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, திரைப்படத்தில் நடித்த அல்லு அா்ஜுன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனியாா் பாதுகாவலா்கள் புடைசூழ அந்த திரையரங்குக்கு வந்தனா்.
ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி!
அவரைப் பாா்க்க ரசிகா்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனா். அப்போது அல்லு அா்ஜுனுடன் வந்த பாதுகாவலா்கள் ரசிகா்களைப் பிடித்து தள்ளினா். இதனால் அப்பகுதியில் கடுமையான தள்ளமுள்ளு ஏற்பட்டது. திரையரங்கின் பிரதான இரும்பு கேட் சரிந்து, ஏராளமானோா் கீழே விழுந்தனா். பலா் நெரிசலில் சிக்கினா். இந்த நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்தனா்.
அவரின் 9 வயது மகன் படுகாயமடைந்தாா். சிறுவனின் தந்தை லேசான காயத்துடன் தப்பினாா். போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். திரையரங்க நிா்வாகத்தினா் உரிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்றும், நடிகா் அல்லு அா்ஜுன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.