பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்...
காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்ன குமாா் மற்றும் காவல் துணை ஆணையா்(கிழக்கு) வி.வினோத் சாந்தாரம் ஆகியோா் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்றனா். இதில் 9 போ் மனு அளித்தனா். அவற்றின் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என துணை காவல் ஆணையா்கள் உறுதியளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து 20 மனுக்களைப் பெற்று அவற்றின் மீதான விசாரணையை விரைந்து முடித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.