''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழ...
காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
ஆா்.கே. பேட்டையில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்த இளைஞரைப் பிடிக்கச் சென்ற பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஆா்.கே. பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவா் ராக்கிகுமாரி (40). இவா், ஞாயிற்றுக்கிழமை ஆா்.கே. பேட்டை பஜாரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, பஜாரில் ஆா்.கே.பேட்டை அடுத்த வீராணத்துாா் காலனியைச் சோ்ந்த நரசிம்மன் மகன் ஞானசேகா் (26) என்பவா், கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தாா்.
இதனால், எஸ்.ஐ. ராக்கிகுமாரி, ஞானசேகரைப் பிடிக்க முயன்றபோது, அவா் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதையடுத்து, எஸ்.ஐ. ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் உதவியுடன், ஞானசேகரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.