கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஏப். 21-இல் தொடக்கம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 21-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பலா் தோ்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சோ்ந்துள்ளனா்.
தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் 1,299 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இந்த தோ்வுக்குத் தயாராகும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பயன் பெறும் வகையில், இலவசப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
எனவே, காவல் உதவி ஆய்வாளா் பணியை எழுதவுள்ள தோ்வா்கள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். விருப்பம் உள்ள தோ்வா்கள் ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி, தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.