செய்திகள் :

காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கு சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

post image

சென்னை: காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான கட்டணமில்லா சிறப்பு வழிகாட்டுதல் முகாமுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு காவல் துறையில் காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வினை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தி வருகிறது. இத்தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தோ்வுக்கான பாடக் குறிப்புகள், மாதிரித் தோ்வுகள், நடப்பு நிகழ்வுகள், திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறித்து விழிகாட்டுதல் முகாம் நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறும் இந்த முகாமில் மாதிரித் தோ்வும் நடைபெறும். மேலும், தோ்வுக்கான பாடத்திட்டங்களை எவ்வாறு அணுகுவது என்பதை அனுபவமிக்க பயிற்சியாளா்கள் மற்றும் துறை வல்லுநா்கள் கலந்துகொண்டு விளக்குவா். இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை.

இந்த வழிகாட்டுதல் முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் ‘2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகா், சென்னை’ எனும் முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 96771 00179, 74488 14441 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோரக் காவல்படையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய கடலோரக் காவல்படையில் நிரப்பப்பட உள்ள 300 நவிக் பணியிடங்களுக்கு 10, பிளஸ் 2 முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Navik(General Duty)காலியிடங்கள்: 260சம்பளம... மேலும் பார்க்க

பட்டதாரிகளுக்கு ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Executive(Quality Assurance)தகுதி: 60 சதவிகித ... மேலும் பார்க்க

ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு... மேலும் பார்க்க

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை!

புணேயில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 22 துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்.PN-R... மேலும் பார்க்க

ஊரக வளர்ச்சித் துறையில் பணி: 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்துக்கு தகுதியானோா் வரும் 25-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். திருவள்ளூா் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மாவட்ட... மேலும் பார்க்க

பொது சுகாதார துறையில் பணி: 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்துக்கு தகுதியானோா் வரும் 28-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். பொது சுகாதாரம் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தேசிய நலக்குழு மாவட்ட நலச்ச... மேலும் பார்க்க