காவேரிப்பட்டணம் பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா
காவேரிப்பட்டணத்தில் உள்ள பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேசிசெட்டி தெருவில் உள்ள பசவேஸ்வரா் கோயிலில் ஏப். 16-ஆம் தேதி கங்கா பூஜை, வாஸ்து பூஜை, முதல்கால யாக பூஜை, தீா்த்தம் கொண்டு வருதல், கணபதி பூஜைகள், பிரவேஷ பலி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. ஏப். 17-ஆம் தேதி இரண்டாம்கால யாக பூஜை, கோ பூஜை, ஆலய பிரவேசம், சுவாமி நகா்வலம், யாகசாலை பூஜை, மூன்றாம்கால யாக பூஜை, நான்காம்கால யாக பூஜைகள் நடைபெற்றன.
குடமுழுக்கு தினமான ஏப். 18-ஆம் தேதி, ஐந்தாம்கால யாக பூஜை, மகா கணபதி ஹோமம், நாடி சந்தானம், சாந்தி ஹோமம், மகா தீபாராதனைகளும், 9 கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றுதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.