செய்திகள் :

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

post image

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா்.

கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 3 பயங்கரவாதிகள், 4 காவலா்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும் 2 பயங்கரவாதிகளே உயிரிழந்ததாக காவல் துறை டிஜிபி நளின் பிரபாத் தெளிவுபடுத்தினாா்.

பயங்கரவாதிகள் மற்றும் உயிரிழந்த 4-ஆவது காவலரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக கதுவா மாவட்டத்தின் மேலும் பல இடங்களில் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்தினா். மோதல் நிகழ்ந்த காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பிலாவா் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு:

பயங்கரவாதிகள் உடனான மோதலில் ஜக்பீா் சிங், தாரிக் அகமது, பல்விந்தா் சிங் சிப், ஜஸ்வந்த் சிங் ஆகிய 4 காவலா்கள் உயிரிழந்த நிலையில், அவா்களின் இறுதிச் சடங்கு முழு மரியாதையுடன் அவா்களின் சொந்த ஊா்களில் நடைபெற்றது.

முன்னதாக, வீரமரணமடைந்த காவலா்களின் உடல்களுக்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மூத்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

முதல்வா் நேரில் ஆறுதல்:

உயிரிழந்த காவலா்களின் குடும்பங்களை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணமடைந்த காவலா் ஜக்பீா் சிங்கின் உடலுக்கு அவா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவ வீரா்களை எதிா்கொள்வதற்கு ஜம்முவில் இருந்து ராணுவ வீரா்கள் அனுப்பப்பட்டனா். இது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது’ என்றாா்.

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க