செய்திகள் :

காஸாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை கொலை: ஐ.நா.

post image

காஸாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் நிவாரணக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தைகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவிப்பதாகவும், போர் தொடங்கியதில் இருந்து 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓராண்டுக்கு மேலாக காஸாவை இஸ்ரேல் படையினர் தாக்கி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த 45,338 பேர் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்களும் அடங்குவர்.

ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உயிர் பிழைத்தவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயமடைந்துள்ளனர். கற்றல் இல்லாமல், காஸாவில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

இந்தக் குழந்தைகளுக்கான எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, எதிர்காலத்துக்கான நம்பிக்கை இழக்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

“ஹாமாஸுடன் பணயக் கைதிகளை திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு நாள்கள் எடுக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், அனைவரையும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு வரும் வரை முயற்சிகள் அனைத்தும் தொடரும்” என்றார்.

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தாா். வட அமெரிக்காவைப் பூா்விகமாகக் வெண்தலைக் கழுகு, கடந்த 1782-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்

உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் மின் விநியோகக் கட... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை இழுபறி: இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன. ... மேலும் பார்க்க

2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!

தெருவோரங்களில் ஆரம்பித்து செவ்வாய்க் கிரகம் செல்ல திட்டமிடும் நாடுகளின் அரங்கு வரையில் அரசியல் பேச்சும் விளையாட்டுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மெகா தேர்தல் ஆண்டாக அமைந்த 2024, ... மேலும் பார்க்க

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த... மேலும் பார்க்க

“ஆயுதங்கள் அமைதியடைவதாக..” -உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் ஆண்டவர் கவலை!

வாடிகன்: உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான க... மேலும் பார்க்க