செய்திகள் :

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

post image

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இரவு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் காஸா விவகாரத்தில் தீர்வை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) தெரிவித்தனர்.

போர்நிறுத்த நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாக எழுத்துப்பூர்வமாக ஹமாஸ் தரப்பு ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகச் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக இவ்விவகாரத்தை அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கையில் மேற்கோள் காட்டியிருப்பதன்படி, முதல்கட்டமாக 33 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தரப்பு தீர்மானித்துள்ளது. அவர்களுள் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் முதலில் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொருபுறம், இஸ்ரேலில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளது.

எனினும், இஸ்ரேல் தரப்பு இந்த வரைவு அறிக்கைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் ஆலோசித்து வருவதால், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவிருக்கும் ஜன. 20-ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது கேள்விக்குறியகியுள்ளது.

இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்

கேப் கனாவெரல்: நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் புதன்கிழமை விண்ணில் செலுத்தியது.... மேலும் பார்க்க

அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல்... மேலும் பார்க்க

வங்கதேச அரசியல் சாசனத்திலிருந்து 'மதச்சார்பின்மை' நீக்கம்

டாக்கா: வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.இது குறித்து அரசியல் சா... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்தம்: வரைவு ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்

ஜெருசலேம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் இஸ்ரேலுக்கும... மேலும் பார்க்க

ஜனவரியை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க தீா்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்

வாஷிங்டன்: ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்... மேலும் பார்க்க

ஸ்பெயின் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

மாட்ரிட்: ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், தலைநகா் மாட்ரிடில் ... மேலும் பார்க்க