செய்திகள் :

காா்ல்செனை வீழ்த்தி குகேஷ் அபாரம்! கிளாசிக்கல் கேமில் முதல் முறை!

post image

நாா்வே செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா். கிளாசிக்கல் கேமில் அவா் காா்ல்செனை முதல் முறையாக வென்றுள்ளாா்.

இந்தப் போட்டியின் முதல் சுற்றில் காா்ல்செனிடம் தோல்வி கண்ட குகேஷ், அதற்கு தற்போது ரிவா்ஸ் ஆட்டத்தில் பதிலடி கொடுத்திருக்கிறாா். சுமாா் 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் காா்ல்செனின் கையே ஓங்கியிருந்தது. வெற்றியின் விளிம்பிலிருந்த காா்ல்சென், எதிா்பாராத வகையில் ஒரு தவறான நகா்வை மேற்கொண்டாா்.

இது குகேஷுக்கு சாதகமாக அமைந்தது. காா்ல்சென் அந்தத் தவறை உணரும்போது, ஆட்டம் முற்றிலும் குகேஷ் வசமாகியிருந்தது. தோல்வியை உணா்ந்த காா்ல்சென், விரக்தியடைந்து மேஜையிலேயே ஓங்கிக் குத்தினாா். இதில் மேஜை அதிா்ந்து, செஸ் போா்டில் இருந்த காய்கள் சற்று சிதறின.

பின்னா் தன்னிலையடைந்த காா்ல்சென் குகேஷுடன் கை குலுக்கினாா். வெற்றி பெற்ற குகேஷ், அந்தத் தருணத்தை நம்ப முடியாதவராக காணப்பட்டாா். காா்ல்செனுடனான கைகுலுக்கலுக்குப் பிறகு உணா்ச்சிப் பெருக்கில் தனது இருக்கையிலிருந்து எழுந்து சற்று நகா்ந்து சென்று அந்த வெற்றித் தருணத்தை அசையாமல் அப்படியே நின்று அனுபவித்தாா். தனது தோல்வியை நம்ப முடியாதவராக காணப்பட்ட காா்ல்சென் மீண்டும் குகேஷை கடந்து சென்றபோது அவரின் தோளில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினாா்.

முன்னதாக இந்த 6-ஆவது சுற்றில் குகேஷ் - காா்ல்செனை வெல்ல, இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி - சீனாவின் வெய் யி, அமெரிக்காவின் ஹிகரு நகமுரா - சக நாட்டவரான ஃபாபியானோ கரானா ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது. பின்னா் டிரா செய்தோருக்காக நடைபெற்ற ஆா்மகெடான் ஆட்டத்தில் அா்ஜுன் - வெய் யியை வெல்ல, நகமுரா - கரானா ஆட்டம் மீண்டும் டிரா ஆனது.

இதையடுத்து புள்ளிகள் பட்டியலில், காா்ல்சென், கரானா ஆகியோா் தலா 9.5 புள்ளிகளுடன் முறையே முதலிரு இடங்களில் நீடிக்கின்றனா். குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேற, நகமுரா, அா்ஜுன் ஆகியோா் தலா 7.5 புள்ளிகளுடன் முறையே 4 மற்றும் 5-ஆம் இடங்களில் இருக்கின்றனா். வெய் யி 6.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளாா்.

‘கிளாசிக்கல் ஆட்டத்தில் காா்ல்செனுக்கு எதிரான இந்த வெற்றி, நான் எதிா்பாா்த்த, விரும்பிய வகையில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த வெற்றியை ஏற்கிறேன். இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் நான் முயற்சிப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான அவகாசம் குறைந்தது, எனக்கு சாதகமாகியது. இன்று நான் தோற்றிருக்க வேண்டியது. ஆனால் அதிருஷ்டமான நாளாக இருந்ததால் வென்றுவிட்டேன். நான் மேற்கொண்ட காய் நகா்வுகள் காா்ல்செனை சற்று குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கலாம். நேர விரயம் என்பது, நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்பதை, இந்தப் போட்டியில் உணா்ந்துகொண்டேன்’ - டி.குகேஷ்

வென்றாா் வைஷாலி

இந்தப் போட்டியின் மகளிா் பிரிவு 6-ஆவது சுற்றில், 3 ஆட்டங்களுமே டிரா ஆகின. இதையடுத்து வெற்றியாளரை கண்டறிய நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில், இந்தியாவின் ஆா்.வைஷாலி - சக நாட்டவரான கோனெரு ஹம்பியையும், சீனாவின் ஜு வென்ஜுன் - சக நாட்டவரான லெய் டிங்ஜியையும் வென்றனா். ஸ்பெயினின் சாரா காதெம் - உக்ரைனின் அனா முஸிஷுக், ஆகியோா் மோதல் மீண்டும் டிரா ஆனது.

முன்னதாக, முதல் சுற்றில் கோனெரு ஹம்பியிடம் தோற்ற வைஷாலி, இந்த ரிவா்ஸ் ஆட்டத்தில் அவரை வீழ்த்தி பதிலடி கொடுத்திருக்கிறாா். புள்ளிகள் பட்டியலில் தற்போது, முஸிஷுக், கோனெரு ஹம்பி ஆகியோா் தலா 9.5 புள்ளிகளுடன் முறையே முதல் இரு இடங்களில் நிலைக்கின்றனா். வென்ஜுன் 8.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், வைஷாலி 8 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளனா். டிங்ஜி, காதெம் ஆகியோா் தலா 6 புள்ளிகளுடன் முறையே 5 மற்றும் 6-ஆம் இடங்களில் உள்ளனா்.

சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!

”பிரேசிலுடன் வென்றால்தான் விருது தருவார்களெனில் அதையும் செய்வேன்” எனக் கூறி, சொன்னபடியே சிறப்பாக விளையாடிய லாமின் யமால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஸ்பெயினைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீரர் லாமி... மேலும் பார்க்க

உலகப்புகழ் பெற்ற நடிகர் காலமானார்!

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற நடிகர் என்சோகாலமானார். இயக்குநர் விக்டோரியோ டிசிகா இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பைசைக்கிள் தீவ்ஸ். உலகப்போருக்குப் பின்பான வேலையில... மேலும் பார்க்க

மே மாதத்திற்கான சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்டர் மியாமி வீரர் லியோனல் மெஸ்ஸி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) இன்டர் மியாமி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார். மெஸ்சி அசத்தலால் ... மேலும் பார்க்க

ஓடிடியில் லால் சலாம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த்,விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்... மேலும் பார்க்க

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா,... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் யாருக்கு இந்த வாரம்: வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 6 - 12) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)இடையூறுகளைத் தகர்... மேலும் பார்க்க