ஓடிடியில் லால் சலாம்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்படம்ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று தோல்விப்படமானலும் சுமாரான வசூலைப் பெற்றது.
மேலும், படத்தின் தோல்வியைத் தொடர்ந்து படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருடுபோனதாக ஐஸ்வர்யா கூறியதால் ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்த பிரச்னைகளால் இப்படம் ஓராண்டுக்கு மேலாக ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், லால் சலாம் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?