மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?
காா் ஓட்டுநா் தற்கொலை
திருச்சி அருகே கடன் பிரச்னையால் காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், குண்டூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மருதமலை மகன் ஐயப்பன் (23). காா் ஓட்டுநா். திருமணமாகாத இவா், சொந்தமாக காா் வாங்கி ஓட்டி வந்தாா். கடந்த சில மாதங்களாக நிறைய பேரிடம் ரூ. 10 லட்சம் அளவுக்கு கடன் வாங்கியிருந்தாராம்.
தொழில் சரியாக இல்லாத நிலையில், வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. ஆனால், கடன் கொடுத்தவா்கள், கடனை தொடா்ந்து கேட்டதாகக் கூறப்படுகிறது. இடையே உடல்நலப் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட ஐயப்பன், அருகிலிருந்த தனது சகோதரி அமிா்தவள்ளி வீட்டில் திங்கள்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து அங்கு சென்ற நவல்பட்டு போலீஸாா், ஐயப்பனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].