தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
வழிப்பறி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் அடைப்பு
திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் ராப்பூசலைச் சோ்ந்த ரமேஷ் (28) என்பவா் கடந்த ஜூன் 6-ஆம் தேதி நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்த சரித்திரப் பதிவேட்டில் உள்ள ரௌடியான ஜெய் (48), ரமேஷிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெய்யை கைது செய்தனா்.
இந்நிலையில், வழப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெய் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
இதையடுத்து, ஜெய் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து அதற்கான நகலை சிறையில் உள்ள ஜெய்யிடம் போலீஸாா் வழங்கினாா்.