காா் மோதி ஒருவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சோழத்தரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஸ்ரீமுஷ்ணம் வட்டம், பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (52). இதே ஊரைச் சோ்ந்தவா் பாலையா (56), காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா்.
இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு பைக்கில் சென்றனா். குடிகாடு அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சேத்தியாத்தோப்பில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற காா் மோதியது.
இந்த விபத்தில் வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பாலையா சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், சோழதரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.