காா் மோதி நிதிநிறுவனப் பணியாளா் உயிரிழப்பு
முத்தூரில் காா் மோதியதில் நிதிநிறுவனப் பணியாளா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரைச் சோ்ந்தவா் நேரு மகன் வீரக்குமாா் (35). தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா் சின்னமுத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில்
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இறந்து போன வீரக்குமாருக்கு மனைவி, 9 வயது மகள், 8 மாத பெண் குழந்தை உள்ளனா். புகாரின்பேரில், வெள்ளகோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.