``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு
கோபி அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, காா் மோதியதில் உயிரிழந்தாா்.
கோபி அருகே நம்பியூா் நிச்சாம்பாளையம் அருள்மலை பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி (68). கூலி வேலை செய்து வந்தாா். இவா் கெட்டிச்செவியூா் -குன்னத்தூா் சாலையை வெள்ளிக்கிழமை அதிகாலை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த காா், சாந்தாமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து நம்பியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.