செய்திகள் :

கிங்டம்: டப்பிங் பணிகளைத் தொடங்கிய விஜய் தேவரகொண்டா!

post image

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்தப் படத்துக்கு பிறகு பெரிய அளவில் வெற்றிப் படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா கடைசியாக கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாகவும் முதல் பாதி முடிவடைந்ததாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி மொத்த கோல்கள் அடிப்படையில் டார்ட்மண்ட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் லீக்கில் டார்ட்மண்ட் உடனான முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் பா... மேலும் பார்க்க

பாங்காக் சென்ற இட்லி கடை படக்குழு!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறுகிறது. ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்பட... மேலும் பார்க்க

இறந்தவர்களைப் பாட வைக்க விருப்பமில்லை: ஹாரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசியுள்ளார். தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இறுதியாக, ரவி மோகனின் பிரதர் படத்திற்கு இச... மேலும் பார்க்க

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் 3 நாயகிகள்?

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்திற்குப் பின் இயக்குநர் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் ... மேலும் பார்க்க

ரசிகர்களுக்கு ரெட்ரோ புடிக்கும்: கார்த்திக் சுப்புராஜ்

ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக... மேலும் பார்க்க

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.16 ஏப்ரல் 2025 (செவ்வாய்க்கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - களத... மேலும் பார்க்க