செய்திகள் :

`பழக விருப்பமில்லை வேண்டாம்’ - மறுத்த பெண்ணை வீடுபுகுந்து வெட்டிய இளைஞன்.. தென்காசி அருகே கொடூரம்

post image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருக்கும் ஊருக்கு அருகே உள்ள பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று ஊர்சுற்றி தங்களது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது காதலியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு திருமலைக்குமார் புதியதாக வீடு கட்டியுள்ளார். இந்தநிலையில், திருமலைக்குமாரின் காதலில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபகாலமாக திருமலைக்குமாருடன் பேசுவதை அந்த இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.

திருமலைக்குமார்

தனது காதலி தன்னை ஒதுக்குவதை எண்ணி மனம் புழுங்கிய திருமலைக்குமார், இதுதொடர்பாக தனது காதலியிடம் விவரம் கேட்டுள்ளார்.

அப்போது, 'உன்னுடன் பழக இனியும் எனக்கு விருப்பமில்லை. இனி என்னோடு பேசாதே' என இளம்பெண் கடுமையாக கூறியுள்ளார். இதனால் திருமலைக்குமார் கடும் மனவேதனைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மன விரக்தியில் இருந்த திருமலைக்குமார் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு காதலியை தேடி அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டுக்குள் புகுந்து காதலியான இளம்பெண்ணை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவரவும் திருமலைக்குமார் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதையடுத்து அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர், தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு இளம்பெண் அனுப்பி வைக்கப்பட்டார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புளியரை

இந்த சம்பவம் தொடர்பாக புளியரை போலீஸில் இளம்பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய திருமலைக்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`செயற்கை சுவாசம் பொருத்திய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை' - மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்கு

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் நடந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக 46 வயது விமானப்பணிப்பெண் வந்திருந்தார். வந்த இடத்தில் அவர் ஹோட்டலில் தங்கி இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டார். இதையடுத்து ... மேலும் பார்க்க

பள்ளிச் சீருடை: `மாணவிக்கு அளவெடுக்க ஆண் டெய்லர்' கட்டாயப்படுத்திய ஆசிரியை - போக்சோவில் வழக்கு பதிவு

பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மத... மேலும் பார்க்க

`பாலியல் வன்கொடுமை முயற்சி' - ஓடும் ரயிலிலிருந்து குதித்த இளம் பெண்! - என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு டெலிவரி செய்யும் வேலை செய்யும் 23 வயதுப் பெண் ஒருவர் தன்னுடைய பழு... மேலும் பார்க்க

இன்ஸ்டா நண்பனை சந்திக்க வீட்டை விட்டுச் சென்ற மாணவிகள்... வக்கீல் உள்பட 2 பேர் போக்ஸோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் அவரது தங்கையான 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோர் கடந்த 13-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்களை கண்டுபிடித்து... மேலும் பார்க்க