இந்த வார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை #VikatanPhotoCards
இன்ஸ்டா நண்பனை சந்திக்க வீட்டை விட்டுச் சென்ற மாணவிகள்... வக்கீல் உள்பட 2 பேர் போக்ஸோவில் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் அவரது தங்கையான 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோர் கடந்த 13-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்களை கண்டுபிடித்து தரும்படி தாய் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின்பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மாணவிகளை திருநெல்வேலியில் வைத்து மீட்டனர்.

மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் தக்கலையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் மற்றும் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மோகன் ஆகியோர் 8-ம் வகுப்பு மாணவியை சிறார்வதை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தக்கலையைச் சேர்ந்த வக்கீல் அஜித்குமார் மற்றும் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மோகன் ஆகியோரை போக்ஸோ வழக்கில் கைதுசெய்த போலீஸார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "அந்த மாணவிகளின் அப்பா இவர்களை பிரிந்து தனியாக வசித்துவருகிறார். அம்மாவுடன் 2 பெண் குழந்தைகளும் வசித்துவந்தனர். வீட்டில் பாட்டி மட்டுமே இருந்துள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டா நண்பனை சந்திப்பதற்காக வீட்டைவிட்டு வெளியேறிய 8-ம் வகுப்பு மாணவியான அக்காவுக்கு துணையாக தங்கையும் சென்றுள்ளார். தக்கலை பகுதியில் சைக்கிளில் சென்ற மாணவிகளிடம் எங்கு போகிறீர்கள் என வக்கீல் அஜித்குமார் கேட்டார். பிரெண்ட் வீட்டுக்கு போவதாக மாணவிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக கூறிய வக்கீல் அஜித்குமார் தனது பைக்கில் ஏற்றி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குவைத்து 8-ம் வகுப்பு மாணவியை சிறார் வதை செய்துள்ளார் வக்கீல் அஜித்குமார்.

பின்னர் இருவரையும் நாகர்கோவில் பேருந்துநிலையத்துக்கு அழைத்துச் சென்று பஸ் ஏற்றி திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்ஸ்டாவில் பழக்கத்தில் இருந்த அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மேளம் இசைக்கும் தொழிலாளி மோகன் என்பவரை பார்க்கச் சென்றுள்ளனர் மாணவிகள். மோகன் அந்த மாணவிகளுக்கு தனியாக வீடு எடுத்துகொடுத்து தங்கவைத்து, 8-ம் வகுப்பு மாணவியை சிறார்வதை செய்துள்ளார். பின்னர் செல்போனில் சார்ஜ் இல்லாமல் திருநெல்வேலியில் சுற்றிதிரிந்த மாணவிகளை போலீஸார் மீட்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வக்கீல் உள்ளிட்ட 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks