ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!
பள்ளிச் சீருடை: `மாணவிக்கு அளவெடுக்க ஆண் டெய்லர்' கட்டாயப்படுத்திய ஆசிரியை - போக்சோவில் வழக்கு பதிவு
பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்கு அளவெடுக்க இன்று டெய்லர்களை அழைத்து வந்துள்ளனர். ஒரு பெண் டெய்லருடன், ஆண் டெய்லரும் அளவெடுதத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் எதிர்த்துள்ளார்.
ஆனால், பள்ளி ஆசிரியை அந்த மாணவி உள்ளிட்ட அனைத்து மாணவிகளையும் கட்டாயப்படுத்தி அளவு எடுக்க வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் பாதிப்படைந்த அம்மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியையுடன் டெய்லர் மீதும் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியை மற்றும் ஆண் மற்றும் பெண் டெய்லரை கைது செய்ய வேண்டும் எனவும், இனி ஆண் டெய்லர்கள் மாணவிகளுக்கு சீருடை அளவீடு செய்யும் பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனக்கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் அந்த தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
