கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன்! - நிதியமைச்சர் அறிவிப்பு
கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"மத்திய அரசின் கிசான் அட்டை மூலமாக கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். அதன்படி, கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்,
கூட்டுறவுத் துறை, சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்கப்படும்.
இதையும் படிக்க | பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
சிறு, குறு நிறுவனங்கள்தான் இந்தியாவை உற்பத்தி மையமாக உருவாக்கி வருகின்றன.
கிசான் கிரெடிட் கார்டு மூலமாக 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற நடவடிக்கை
காலணிகள் உற்பத்தியைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் சலுகைகள் வழங்க ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.