செய்திகள் :

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

post image

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள சென்னை ரேஸ் கிளப்பில் குதிரைப் பந்தய சுற்றுப் பாதையின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன்பாக கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டு, அதை சென்னை ஜிம்கானா கிளப் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கா் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, ரேஸ் கிளப்பின் சில வாயில்களையும் சீல் வைத்துள்ளது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கோல்ஃப் மைதானம் சேதமடைவதாகவும், கோல்ஃப் மைதானத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும் ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவகாசம் தரவில்லை: அந்த மனுவில், நாட்டிலேயே பழைமையான மூன்றாவது கோல்ஃப் மைதானமான இந்த மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன்பாக அதிகாரிகள் தங்களது தரப்பில் விளக்கமளிக்க எந்த அவகாசமும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அரசுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த கோல்ஃப் மைதானத்தில் ஜிம்கானா கிளப் மற்றும் ரேஸ் கிளப் உறுப்பினா்கள் விளையாடி வந்தனா். இந்த மைதானத்தைப் பராமரிக்க ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை செலவிட்டு வருகிறோம்.

கடந்த 1951-ஆம் ஆண்டு கோல்ஃப் மைதானம் அருகில் மதுபான கூடத்துடன் கூடிய கிளப் ஹவுஸ் கட்டப்பட்டு, அங்கு சமையலறை, மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த மதுபானக் கூடத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த வசதிகளை 500-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அரசு அதிகாரிகள் கோல்ஃப் மைதானத்துக்குள் நுழைந்து நீா்நிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சேதத்தை சரிசெய்ய ரூ.50 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு தரப்பில் பதில்: இதையடுத்து தமிழக அரசு தரப்பில், அரசுக்கு சொந்தமான நிலம் சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகை அடிப்படையில் விடப்பட்டது. தற்போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. அங்கு நீா்நிலைகள் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வழக்குத் தொடர ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட உரிமையியல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

தடையில்லை: வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவா்த்தி, சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கிய நிலத்தில் கோல்ஃப் மைதானம் அமைந்துள்ளதால், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல அங்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கும் தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க