கிராம உதவியாளா் பணிகளுக்கான திறனறிவுத் தோ்வு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கான திறனறிவுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூா், சேத்துப்பட்டு, ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி உள்ளிட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கு 1,120 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இதில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் முதற்கட்டமாக வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தோ்வு வட்டாட்சியா் சு.மோகனராமன் முன்னிலையில் தொடங்கியது. இந்த தோ்வுப் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். முதற்கட்டமான தோ்வு வரும் செப். 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து 2-ஆவது கட்டமாக வரும்
செப்.15-ஆம் தேதி முதல் செப். 23-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெறவுள்ளது.