இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!
ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி
ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் தச்சூா் மற்றும் கமண்டல நாகநதி பகுதியில், புதிதாக 3 ஆழ்துளைக் கிணறுகள், 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைதள குடிநீா் நிலையம் அமைக்க நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையா் என்.டி.வடிவேலனிடம் திட்டப் பணி குறித்து ஆலோசனை நடத்தினாா்.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அவா் பணிகளை தொடங்கிவைத்தாா்.
நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன், சுகாதார ஆய்வாளா் வடிவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.