உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 650 மனுக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சுராபாத் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 650 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மன்சுராபாத், காட்டுதெள்ளூா், சித்தாத்துரை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு, ஆனந்தன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் முருகையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் திருமால் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் மனோகரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தொடங்கிவைத்தாா்.
ஊரக வளா்ச்சித்துறை, மகளிா் உரிமைத்தொகை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, மின்சாரத்துறை என பல்வேறு அரசுத் துறையினருக்கு 650 போ் மனு அளித்தனா்.
முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா்கள் லலிதா துரைகண்ணு, காா்த்திகேயன், திமுக ஒன்றியப் பொருளாளா் நரசிம்மன், கவுன்சிலா் பிரேமலதா ராஜசிம்மன், இளைஞரணி ஒன்றியமைப்பாளா் ஹரிகிருஷ்ணன், ஊராட்சி செயலா்கள் சிவக்குமாா், ஐயப்பன் மற்றும் பொதுமக்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.