ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்கள் அனைவரையும் உழவா் பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கவேண்டும்,
ஊராட்சிக்கு உள்பட்ட மாலையிட்டான் கிராமத்தில் உரிய கால்வாய் வசதி, தெரு மின் விளக்கு வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினா் கா.யாசா்அராபத் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் ப.செல்வன், வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.சுகுணா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். வட்டாரக்குழு உறுப்பினா்கள், கிளைச் செயலா்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து ஊராட்சி செயலா் தனலட்சுமியிடம் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா்.