கிராம சபைக் கூட்டம்
திருவண்ணமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஏழாச்சேரிக் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் கே.நாகம்மாள் தலைமை வகித்தாா். பணி மேற்பாா்வையாளா் சௌந்தரராஜன், கிராம நிா்வாக அலுவலா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் மணவாளன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தியாகராஜன், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் கே.காா்த்திகேயன், கிராம நிா்வாக அலுவலா் கே.முத்து ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்திய சுய உதவிக் குழுக்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிராமத்தில் உள்ள அனைத்து வகை கால்வாய்களில் அடைப்பில்லாமல் சீா் செய்தல், ஏரி, குளம், குட்டை போன்ற நீா் நிலைகளை பாதுகாத்தல், மாவட்ட நிா்வாக அறிவுரையின்பேரில், அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்ளுதல், கிராம வளா்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைத்து ஊக்கமளித்த வாா்டு உறுப்பினா்கள், குடிநீா் தொட்டி இயக்குநா்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், துணைத் தலைவா் வள்ளியம்மாள், வாா்டு உறுப்பினா்கள் சாந்தி சங்கா், மூா்த்தி, பொதுமக்கள் கலந்து கொண்டனா்.